உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
கோவை மெட்ரோ மின் கோட்டத்தில் எம்.ஜி.சாலை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர் மற்றும் ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை தெற்கில் சாலைப்புதூர் 110/22 கேவி துணைமின் நிலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மன்னம்பாளையம், வோலைபாளையம், அய்யப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
பல்லடத்தில் கரடிவாவி 110 கேவி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட கரடிவாவி, ஏஎன் பட்டி, செல்லகரச்சல், ஆரகுளம் மற்றும் புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
பல்லடத்தில் வடுகபட்டி 110/22 கேவி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட வடுகபட்டி, மார்க்கம்பட்டி மற்றும் என்சிஜி வலசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.