LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Dec 04, 2025
10:48 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு: பெரம்பலூர்: தத்தனூர், சுத்தமல்லி, முட்டுவாஞ்சேரி, கொட்டியல், வென்மன்கொண்டன், விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, வாட்டர் வொர்க்ஸ் குணமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுக்கோட்டை: கறம்பக்குடி முழுவதும், நெடுவாசல் முழுவதும் மற்றும் ரெகுநாதபுரம் முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும். தஞ்சாவூர்: ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு, முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம், வீரமரசம் பேட்டை, புடலூர், அச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை அமலில் இருக்கும். உடுமலைப்பேட்டை: உடுமலை, ஜி.நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், எம்.என்.பட்டணம், மருள்பட்டி, பி.குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.

Advertisement