
ஜூன் 12 ஆம் தேதிக்கு பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது.
வெயிலின் தாக்கம் அதிகமானதால் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி கல்வி துறை அமைச்சர் முதல்வருடன் ஆலோசித்து ஜூன் 7 ஆம் தேதிக்கு பள்ளியின் திறப்பை தள்ளி வைத்தார்.
ஆனால், வெயிலின் தாக்கம் தற்போதும் குறையாத நிலையில் பள்ளி திறப்பை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனால் 6 முதல் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியும் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பள்ளிகளின் திறப்பு ஒத்திவைக்கப்பட்டதால் குழந்தைகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்க போவதாக அறிவிப்பு
#BREAKING || ஜூன் 12ல் பள்ளிகள் திறப்பு | #SchoolReopen | #TNSchoolReopen | #TNSchools | #TamilNadu | #TNGovt | #Students | https://t.co/CKGwVurgWm pic.twitter.com/0POWBnVt8r
— Polimer News (@polimernews) June 5, 2023