முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியின் முக்கிய தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடமான "சதைவ் அடல்"-லில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிற பாஜக தலைவர்களும் மரியாதை செலுத்தினர். மேலும் வாஜ்பாயின் வளர்ப்பு மகளான நமிதா கவுல் பட்டாச்சார்யா சதைவ்-உம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி, காலமானார்.