PNG வசதி உள்ள வீடுகளில் LPG கட்: மத்திய அரசு அதிரடி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோக முறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்கில், குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) வசதி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், கட்டாயமாக அந்த இணைப்பிற்கு மாற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தவறும்பட்சத்தில் அவர்களுக்கான LPG சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும். மார்ச் 24, 2026 அன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, 'உங்கள் பகுதியில் பிஎன்ஜி வசதி இருப்பதாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அறிவித்த மூன்று மாதங்களுக்குள் நீங்கள் அந்த இணைப்பிற்கு மாற வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகு, அந்த முகவரிக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிரந்தரமாக நிறுத்தப்படும்'.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
STORY | LPG supply to be cut off if households refuse PNG switch where available: Govt order
— Press Trust of India (@PTI_News) March 25, 2026
The government has mandated that cooking gas LPG supply to households will be discontinued if consumers fail to switch to piped natural gas where such connectivity is available, under a… pic.twitter.com/RTMR7Okcci
மாற்றம்
ஏன் இந்த அதிரடி மாற்றம்?
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் எல்பிஜி விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்கவும், உள்நாட்டு உற்பத்தியில் கிடைக்கும் இயற்கை எரிவாயுப் பயன்பாட்டை அதிகரிக்கவும் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் மிச்சமாகும் சிலிண்டர்களை, குழாய் வசதி இல்லாத கிராமப்புறங்களுக்குத் திசைதிருப்ப அரசு திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக பிஎன்ஜி இணைப்பு வழங்க வாய்ப்பில்லை எனச் சான்றிதழ் பெற்றால் மட்டுமே LPG சிலிண்டர் தொடர்ந்து வழங்கப்படும்.
இணைப்பு
வேகமெடுக்கும் LPG இணைப்பு பணிகள்
அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விதிகளின்படி, குழாய் பதிக்கும் பணிகளுக்கு விண்ணப்பித்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் அது 'தானாகவே அங்கீகரிக்கப்பட்டதாக' கருதப்படும். குடியிருப்பு வளாகங்களில் விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை அமல்படுத்த நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்குச் சிவில் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிலம் கையகப்படுத்துதல் அல்லது குழாய் பதிப்பதில் ஏற்படும் சிக்கல்களை அவர்கள் உடனடியாகத் தீர்த்து வைப்பார்கள். "நெருக்கடியான சூழலை ஒரு வாய்ப்பாக மாற்றியுள்ளோம்" என பெட்ரோலியத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார்.