
தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது.
பின்னர் தற்போது நடைபெறவுள்ள ஈரோடு இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை என்ற அறிவிப்பினை தெரிவித்தனர்.
இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ம.க.'வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனையடுத்து இன்று(பிப்.,18) தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை பா.ம.க. நிறுவனர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பானது சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டணி சம்பந்தமான சந்திப்பாக இது இருக்கலாம் என்று கூறப்பட்டது குறிப்பிடவேண்டியவை.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு
தமிழகத்தில் போதை பொருள் தடுப்பதை குறித்து பேசிய அன்புமணி ராமதாஸ்
இதனை தொடர்ந்து சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ் கூறியதாவது, முதல் ஸ்டாலின் உடனான இந்த சந்திப்பு நிச்சயம் அரசியல் குறித்தது இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக பேசியதாகவும், நீர் மேலாண்மை, அரியலூர் சோழர் கால பாசன இடத்தினை நிறைவேற்றுவது குறித்து பேசப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்தும் பேசியதாகவும் கூறினார்.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டதாகவும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.