NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பீகாரில் ரூ.1,700 கோடி மதிப்பிலான புதிய நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பீகாரில் ரூ.1,700 கோடி மதிப்பிலான புதிய நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

    பீகாரில் ரூ.1,700 கோடி மதிப்பிலான புதிய நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2024
    12:08 pm

    செய்தி முன்னோட்டம்

    நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

    மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, நரேந்திர மோடி பீகாருக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.

    மேலும், இன்று பீகாரில் உள்ள பழமையான நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளையும் அவர் பார்வையிட்டார். இந்த இடிபாடுகள் 2016 இல் ஐக்கிய நாடுகளின் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    "நமது கல்வித் துறைக்கு இது மிகவும் சிறப்பான நாள். இன்று காலை சுமார் 10:30 மணிக்கு, நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகம் ராஜ்கிரில் திறக்கப்படும். நாளந்தா நமது புகழ்பெற்ற பகுதியுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது." என்று அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

    பீகார் 

    இரண்டு கல்வித் தொகுதிகளை கொண்ட வளாகம் 

    வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் நிதிஷ் குமார், நாளந்தா பல்கலைக்கழக வேந்தர் அரவிந்த் பனகாரியா ஆகியோர் இன்றைய திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

    ஆஸ்திரேலியா, வங்கதேசம், பூடான், புருனே, தாருஸ்ஸலாம், கம்போடியா, சீனா, இந்தோனேஷியா, லாவோஸ், மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, போர்ச்சுகல், சிங்கப்பூர், தென் கொரியா, இலங்கை, வியட்நாம் என மொத்தம் 17 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு தூதர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    இன்று திறக்கப்பட்ட வளாகம் இரண்டு கல்வித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது,

    ஒவ்வொன்றிலும் 40 வகுப்பறைகள் மற்றும் மொத்த 1900 இருக்கைகள் உள்ளன. இதில் இரண்டு ஆடிட்டோரியங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 300 பேர் அமரும் திறன் கொண்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பீகார்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    பீகார்

    கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம்  கேரளா
    ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் இந்தியா
    மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்தல்
    பீகாரில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்து நிதிஷ் குமார்

    பிரதமர் மோடி

    'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங் மன்மோகன் சிங்
    விவேகானந்தர் நினைவிடத்தில்  45 மணி நேர தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி கன்னியாகுமரி
    இறுதிக்கட்ட பொது தேர்தல்: பிரதமர் மோடியின் தொகுதி உட்பட 57 இடங்களில் இன்று வாக்குப்பதிவு  இந்தியா
    'தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை': கன்னியாகுமரி தியானத்திற்குப் பிறகு பிரதமர் மோடி உருக்கம்   இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025