NRIகளுக்கான பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்: அதன் சிறப்பம்சங்கள்
செய்தி முன்னோட்டம்
ஒடிசாவில் நடைபெறும் 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் ஒடிசாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை 50 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் NRI முன் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
அதன் பின்னர், மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய புலம்பெயர்ந்தோருக்கான (NRI) சிறப்பு சுற்றுலா ரயிலான பிரவாசி பாரதிய விரைவு ரயிலை புது டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
ஒடிசாவில் புதன்கிழமை தொடங்கும் 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சிறப்பு ரயில் தொடங்கப்படும்.
1915ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாத்மா காந்தி இந்தியாவுக்குத் திரும்பியதை நினைவுகூரும் வகையில் இன்று ஜனவரி 9ஆம் தேதி இந்த ரயில் சேவை தொடங்குகிறது.
சிறப்பம்சங்கள்
பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பம்சங்கள்
பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ் ஒரு சிறப்பு அதிநவீன சுற்றுலா ரயிலாகும். இது NRIகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அதுவும் 45 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்காக.
இந்த ரயில் மூன்று வாரங்களுக்கு முக்கிய சுற்றுலா மற்றும் மத இடங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள பல இடங்களுக்கு பயணிக்கும்.
அயோத்தி, பாட்னா, கயா, வாரணாசி, மகாபலிபுரம், ராமேஸ்வரம், மதுரை, கொச்சி, கோவா, ஏக்தா நகர் (கேவாடியா), அஜ்மீர், புஷ்கர் மற்றும் ஆக்ரா ஆகியவை பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸின் பயண இடங்களாகும்.
கூடுதலாக, இந்த ரயிலில் 156 பயணிகள் பயணிக்க முடியும்.