பிரதமர் மோடி பங்கேற்கும் டெல்லி பல்கலைக்கழக விழா: கருப்பு சட்டை அணிய தடை
செய்தி முன்னோட்டம்
டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்குமாறு பல்கலைக்கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்களது அழைப்பினை ஏற்று பிரதமர் மோடி இன்று(ஜூன்.,30) கலந்துக்கொண்டுள்ளார்.
இந்த விழாவானது இன்று(ஜூன்.,30) டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல்நோக்கு அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ளும் பிரதமர் மோடி அகாடமி கட்டிடம், கணினி மையம் மற்றும் கல்வி தொகுதி கட்டிடம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பல்கலைக்கழக இந்து கல்லூரியின் பொறுப்பு ஆசிரியரான மீனு ஸ்ரீவத்சவா சுற்றறிக்கை ஒன்றினை 7 வழிகாட்டுதல்கள் உடன் அனுப்பியுள்ளார்.
அதன்படி, பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சியின் நேரலையில் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோடி
பண்டிகை நாளினை வேலை நாளாக அறிவித்த பல்கலைக்கழக நிர்வாகம்
மேலும், இந்நிகழ்ச்சிக்கு நேரில் வருகைத்தரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருப்புநிறஆடையினை அணிந்து வரக்கூடாது.
அதேப்போல் நேரலையில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 5 நாட்களுக்கான வருகைப்பதிவுகள் அளிக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த சுற்றறிக்கை குறித்து கேட்டப்பொழுது, இந்த அறிவிப்பு கல்லூரி சார்பில் வழங்கப்பட்டதில்லை. ஏதோ தவறு நடந்துள்ளது.
நேரலை விவரங்கள் குறித்து மின்னஞ்சல் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளேன்.
ஆனால் வருகைப்பதிவு குறித்த அறிவிப்புகள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்று மீனுஸ்ரீவத்சவா தற்போது விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக பிரதமர்மோடி வருகையினையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடுகளை மேற்கொள்ள நேற்று(ஜூன்.,29)வேலைநாளாக அறிவித்த நிர்வாகம், பண்டிகைக்கொண்டாடும் ஊழியர்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிப்பதாக தெரிவித்தது.
இதற்கு பேராசிரியர்களுள் ஒருப்பிரிவினர் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.