#PMMomentos: ஏலத்தில் விடப்படும் பிரதமர் மோடியின் நினைவு பரிசுகள்
பிரதமர் மோடி, தனது பெற்ற நினைவு பரிசுகளை ஏலமிடுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஏலத்தில் கிடைக்கும் பணத்தை கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு வழங்குவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த ஏலமிடும் வழக்கம் அவர் குஜராத்தின் முதல்வராக இருந்த காலம் தொட்டு செய்து வருகிறார். அவரது பொது வாழ்வில் இது ஆறாவது முறையாக நடைபெறும் ஏலமாகும். பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று ஆரம்பமான இந்த ஏலம், அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறும். கிட்டத்தட்ட 600 பொருள்கள் ஏலத்தில் வழங்கப்படவுள்ளன, இதன் மொத்த ஆரம்ப விலை சுமார் ரூ.1.5 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
Twitter Post
ஏலத்தில் விடப்படும் பொருட்கள்
இந்த ஏலத்தில், 2024 பாராலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற அஜித் சிங், சிம்ரன் சர்மா, வெள்ளி பதக்கம் பெற்ற நிசாத் குமார் ஆகியோரின் விளையாட்டு ஷூக்கள், பிரதமரின் வெள்ளி வீணை மற்றும் அயோத்தி ராமர் கோவிலின் மினியேச்சர் போன்ற பல பரிசுப் பொருட்கள் அடங்கும். இந்த ஏலத்தில், கலந்துகொள்ள pmmementos.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் செய்யலாம். மாறாக, புது டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் ஹவுசில் உள்ள நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் நினைவு பரிசுகள் ஏலம் விலை ரூ.600-ல் தொடங்கி ரூ.8.26 லட்சம் வரை விற்கப்படும்.