Page Loader
மாணவர்களோடு கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி - ஜனவரி 27 ஆம் தேதி காணொளி மூலம் நிகழ்ச்சி
பிரதமர் மோடி பொது தேர்வு எழுதும் மாணவர்களோடு கலந்துரையாடல்

மாணவர்களோடு கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி - ஜனவரி 27 ஆம் தேதி காணொளி மூலம் நிகழ்ச்சி

எழுதியவர் Nivetha P
Jan 03, 2023
11:42 pm

செய்தி முன்னோட்டம்

'பரிக்க்ஷா பே சார்ச்சா' என்னும் பெயரில் கடந்த 2018ம் ஆண்டு முதல் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள் மற்றும் அவை அளிக்கும் மன அழுத்தங்கள் குறித்தும், அதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்தும் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். இம்முறை நடக்கவுள்ள இந்த உரையாடல் 6வது முறையாக நடைபெறவுள்ளது. பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பதற்றம், மன அழுத்தம் முதலியனவற்றை போக்கும் வகையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் இந்த கலந்துரையாடலை மோடி அவர்கள் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடவேண்டியவை.

ஜனவரி 27ம் தேதி காணொளி மூலம் நடைபெறவுள்ளது

மாணவர்களுக்கு உதவி குறிப்புகள் அளிக்கவுள்ள மோடி, அவர்களின் கேள்விக்கும் பதிலளிக்கவுள்ளார்

இதனை தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களிடம் வருகிற ஜனவரி 27ம் தேதி காணொளி மூலமாக பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். இந்த தகவலை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தேர்வின் பொழுது ஏற்படும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது போன்ற உதவி குறிப்புகளை பிரதமர் மோடி மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கவுள்ளார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் போது, போட்டிகள் வைக்கப்பட்டு அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சுமார் 2,050 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சகம் சார்பில் பரிசு வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.