வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் 'ஆட்சி': வாழ்த்துச் சொன்ன பிரதமர் மோடி! இந்தியா-வங்கதேச உறவில் புதிய திருப்பம்?
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த 13-வது நாடாளுமன்ற தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி (BNP) கட்சியைத் தீர்க்கமான வெற்றிக்கு இட்டுச் சென்ற திரு. தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி உங்கள் தலைமையின் மீது வங்கதேச மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது," எனக் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
I convey my warm congratulations to Mr. Tarique Rahman on leading BNP to a decisive victory in the Parliamentary elections in Bangladesh.
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
This victory shows the trust of the people of Bangladesh in your leadership.
India will continue to stand in support of a democratic,…
புதிய உறவு
புதிய உறவுக்கான எதிர்பார்ப்பு
பிரதமர் மோடி மேலும், ஜனநாயக மற்றும் உள்ளடக்கிய வங்கதேசத்திற்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும், இரு நாடுகளின் பொதுவான வளர்ச்சி இலக்குகளை அடைய இணைந்து செயல்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், தெற்காசிய பிராந்தியத்தில் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் நதிநீர் பங்கீடு போன்ற முக்கிய விவகாரங்களில் தாரிக் ரஹ்மானின் புதிய அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா ஆர்வமாக உள்ளது.