LOADING...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை; பேச்சின் முக்கிய அம்சங்கள்
பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை; பேச்சின் முக்கிய அம்சங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 18, 2026
08:54 pm

செய்தி முன்னோட்டம்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் போதிய ஆதரவின்றி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இந்த மசோதாவை நிறைவேற்ற அரசு எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றதற்காக நாட்டின் தாய்மார்களிடமும் சகோதரிகளிடமும் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். மேலும், இந்த மசோதாவை எதிர்த்த எதிர்க்கட்சிகள், மகளிர் முன்னேற்றத்தைத் தடுப்பதாகக் கூறி, இதற்கான விளைவுகளை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார். நாடாளுமன்றத்தில் நடந்த இந்த முக்கிய நிகழ்வு, இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

முக்கிய அம்சங்கள்

மசோதாவின் பின்னணி மற்றும் முக்கிய அம்சங்கள்

நாரி சக்தி அதினியம் (Nari Shakti Adhiniyam) என்று அழைக்கப்படும் இந்த அரசியலமைப்பு (131வது திருத்த) மசோதாவின் முக்கிய நோக்கம், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதாகும். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் எல்லை நிர்ணய நடைமுறையை முடித்து, 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்தச் சட்டத்தைச் செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டமிட்டிருந்தது. இதன் மூலம் மக்களவை இடங்களை 543லிருந்து 816 ஆக உயர்த்தி, பெண்களுக்கு உரிய இடங்களை ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டது.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் நடந்த வாக்குப்பதிவின் நிலவரம்

இந்த மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை இரவு நடந்த வாக்கெடுப்பில், ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணிக்குத் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை. மொத்தம் 528 உறுப்பினர்கள் வாக்களித்ததில், மசோதாவிற்கு ஆதரவாக 298 பேர் மட்டுமே வாக்களித்தனர். மசோதா நிறைவேற 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 230 உறுப்பினர்கள் மசோதாவை எதிர்த்து வாக்களித்ததால், அது தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

மன்னிப்பு

மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி

நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "இன்றைய தினம் நாட்டின் பெண்களுக்கு மிக முக்கியமான ஒரு விஷயம் குறித்துப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஒவ்வொரு குடிமகனும் மகளிர் முன்னேற்றம் எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதைக் கண்கூடாகக் காண்கிறார்கள்." என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். தனது அரசின் தொடர் முயற்சிகள் இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வர முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் தாய்மார்களிடமும் சகோதரிகளிடமும் மன்னிப்பு கோருவதாக உருக்கமாகப் பேசினார்.

Advertisement

எச்சரிக்கை

எதிர்க்கட்சிகளுக்குத் தீவிர எச்சரிக்கை

மசோதாவை எதிர்த்து வாக்களித்த எதிர்க்கட்சிகள், மகளிர் அதிகாரமடைதலைத் தடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். ஜனநாயகத்தில் மகளிரின் பங்களிப்பை அதிகரிக்க அரசு மேற்கொண்ட இந்த முயற்சியை முறியடித்ததற்கு, எதிர்க்கட்சிகள் உரிய விலையைத் தர நேரிடும் என்ற தொனியில் அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்தத் தோல்விக்கு எதிர்க்கட்சிகளின் அரசியலே காரணம் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு பின்வாங்காது என்பதையும் தெளிவுபடுத்தினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement