NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கன்னியாகுமரியில் தியானம் செய்த பிறகு பிரதமர் மோடியின் புதிய தீர்மானம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கன்னியாகுமரியில் தியானம் செய்த பிறகு பிரதமர் மோடியின் புதிய தீர்மானம்

    கன்னியாகுமரியில் தியானம் செய்த பிறகு பிரதமர் மோடியின் புதிய தீர்மானம்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 03, 2024
    02:40 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் கன்னியாகுமரியில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், "பாரதத்தின் வளர்ச்சிப் பாதை நம்மைப் பெருமையுடனும் புகழுடனும் வரவேற்கிறது" என்று கூறியுள்ளார்.

    கன்னியாகுமரியில் மேற்கொண்ட ஆன்மீக பயணம் குறித்து பேசிய அவர், வெளி உலகத்திலிருந்து தன்னை தானே பிரித்துக்கொள்ள இந்த பயணம் உதவியது என்று கூறியுள்ளார்.

    "ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான 2024 மக்களவைத் தேர்தல் நமது தேசத்தில் இன்று நிறைவடைகிறது. தற்போது என் மனம் பல அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

    "எனக்குள் எல்லையற்ற ஆற்றல் ஓட்டத்தை" உணர்கிறேன் என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

    இந்தியா 

    கன்னியாகுமரியில் நடந்த தியானத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி

    தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, கன்னியாகுமரியில் தியானம் செய்யத் தொடங்கியபோது, ​​"அமைதியான அனுபவம்" கிடைத்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    "சூடான அரசியல் விவாதங்கள், தாக்குதல்கள் மற்றும் எதிர்த்தாக்குதல்கள், தேர்தல்களின் போட்டிகள், குற்றச்சாட்டுகள்" அனைத்தும் மறைந்து தன் மனதில் அமைதி பரவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    கன்னியாகுமரியில் நடந்த தியானத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, தனக்குள் ஒரு "பற்றற்ற உணர்வு" தோன்றியதாகவும், தனது மனம் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் விலகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

    "என்னுள் ஒரு பற்றின்மை வளர்ந்தது.. என் மனம் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் விலகியது. இவ்வளவு பெரிய பொறுப்புகளுக்கு மத்தியில் தியானம் செய்வது சவாலான விஷயமாகும். ஆனால் கன்னியாகுமரியும் சுவாமி விவேகானந்தரின் உத்வேகமும் அதை சிரமமின்றி எனக்கு கொடுத்தது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கன்னியாகுமரி
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா

    கன்னியாகுமரி

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் தமிழ்நாடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் மாவட்ட செய்திகள்

    பிரதமர் மோடி

    பூட்டானின் உயரிய குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு பூட்டான்
    தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாடுகிறார் பிரதமர் மோடி  தமிழ்நாடு
    'கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்த இந்திரா காந்தி': காங்கிரஸை கடுமையாக சாடும் பிரதமர் மோடி  இந்தியா
    "உச்சநீதிமன்றத்தில் இருந்து கூட ஜாமீன் கிடைக்கவில்லை': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025