மத்திய கிழக்கில் ஜிபிஎஸ் சிக்னலை இழக்கும் விமானங்கள்- விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை
மத்திய கிழக்கின் சில பகுதிகளில் பறக்கும் பயணிகள் விமானங்கள், ஜிபிஎஸ் சிக்னலை இழப்பதாக வரும் தகவல்களை அடுத்து, விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ அறிவுரைகளை வழங்கியுள்ளது. அப்பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்கும் போது, விமானங்களின் வழிசெலுத்தல்(நேவிகேஷன்) அமைப்புகள் ஏமாற்றப்படுவதாக சமீபத்திய நாட்களில் பல செய்திகள் வந்துள்ளன. இது பெரிய பாதுகாப்பு அபாயமாக வேகமாக உருவாகி வருவதால், அச்சுறுத்தலின் தன்மை மற்றும் அதற்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுவது என்பது குறித்து, விமான நிறுவனங்களை எச்சரிக்கும் நோக்கோடு, டிஜிசிஏ ஆலோசனைகளை வழங்கியுள்ளது. "ஜிஎன்எஸ்எஸ் (குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம்) ஜம்மிங் மற்றும் ஸ்பூஃபிங் பற்றிய புதிய அச்சுறுத்தல்கள் மற்றும் அறிக்கைகள் காரணமாக, விமானப் போக்குவரத்துத் துறை நிச்சயமற்ற நிலையில் உள்ளது" என்று சுற்றறிக்கை டிஜிசிஏ கூறுகிறது.
ஸ்பூஃபிங்(விமானங்களை ஏமாற்றுதல்) எப்படி வேலை செய்கிறது?
மத்திய கிழக்கின் சில பகுதிகளில் பறக்கும் விமானங்கள் ஆரம்பத்தில் ஸ்பூஃபிங் ஜிபிஎஸ் சிக்னலைப் பெறுகின்றன. இந்த சமிக்ஞை விமானத்தின் உட்கட்டமைப்பு அமைப்பை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. சிக்னல் பெரும்பாலும் விமானத்தின் அமைப்பின் ஒருமைப்பாட்டை சமரசம் செய்யும் அளவுக்கு வலுவாக இருக்கும். இது ஒரு சில நிமிடங்களில், இன்நாஸியால் ரெஃபரன்ஸ் சிஸ்டத்தை (IRS) நிலையற்ற தாக்குவதால், பல சமயங்களில், விமானம் அனைத்து நேவிகேஷன் திறனையும் இழக்கிறது. இன்நாஸியால் ரெஃபரன்ஸ் சிஸ்டம் என்பது, கைரோஸ்கோப்புகள், முடுக்கமானிகள் மற்றும் உயரத்தை அளக்கும் எலக்ட்ரானிக்ஸ், வேகம் மற்றும் நேவிகேஷன் தகவல்களை வழங்குவதின் மூலம், ஒரு விமானம் வான்வெளியில் எவ்வாறு நகர்கிறது என்பதை தீர்மானிக்க முடியும்.
எந்தெந்த பகுதியில் இப்படி நடக்கிறது?
வடக்கு ஈராக் மற்றும் அஜர்பைஜான் வான் பரப்புகள் இந்த விவகாரத்தில் முக்கியமான கவலைக்குரிய இடமாக இருக்கின்றன. செப்டம்பரில், 12ல் இருவேறு தனித்தனி சம்பவங்கள் பதிவாகியுள்ளன, சமீபத்தில் நவம்பர் 20 அன்று துருக்கியின் அங்காராவுக்கு அருகில் இது போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இவ்வாறு நடப்பதற்கு எது காரணம்? இவ்வாறு நடப்பதற்கு இதுவரை காரணங்கள் கண்டறியப்படவில்லை என்றாலும், மத்திய கிழக்கு பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும், இராணுவ மின்னணு போர் அமைப்புகள் ஜம்மிங் மற்றும் ஸ்பூஃபிங் நடவடிக்கைகளுக்கு காரணமாக கூறப்படுகிறது.
டிஜிசிஏ வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகள் என்ன?
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) சுற்றறிக்கை, சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் இந்த விஷயத்தில் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) வழிகாட்டுதலைக் கருத்தில் கொண்டு, வளர்ந்து வரும் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது. இது விமான ஆபரேட்டர்கள், விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கான விரிவான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டங்களை அந்த அறிக்கையில் டிஜிசிஏ வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.