Page Loader
தமிழக அரசு விரைவு பேருந்துகளில் 5 முறைக்குமேல் பயணிப்போருக்கு 50% கட்டண சலுகை 
தமிழக அரசு விரைவு பேருந்துகளில் 5 முறைக்குமேல் பயணிப்போருக்கு 50% கட்டண சலுகை

தமிழக அரசு விரைவு பேருந்துகளில் 5 முறைக்குமேல் பயணிப்போருக்கு 50% கட்டண சலுகை 

எழுதியவர் Nivetha P
May 23, 2023
10:57 am

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசு சார்பில் இயங்கும் பேருந்துகள் தமிழ்நாடு மாநிலத்திற்குள் மட்டும் இயக்கப்படுவதில்லை. அதனை தாண்டி வெளிமாநிலங்களுக்கும் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பட்ஜெட் 2023 கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையின் போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ஒரு மாதத்திலேயே 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்பவர்களுக்கு அடுத்த தொடர் முன்பதிவு பயணங்களுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அந்த சலுகையானது தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதுபோல் அரசு விரைவு பேருந்துகளில் 6வது முறையாக முன்பதிவு செய்வோருக்கு தாமாக 50% கட்டண சலுகை வழங்கும் வகையில் www.tnstc.in என்னும் இணையத்தளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

சொகுசு பேருந்துகள் 

அரசு சொகுசு பேருந்துகளில் பயணிகளின் என்ணிக்கையினை அதிகரிக்க முயற்சி 

இதற்கிடையே இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து துறை உயரதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ், 300 கிமீ., மேலான நெடும் தூரம் கொண்ட 251 வழித்தடங்களில் தற்போதுவரை 1,078 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பேருந்துகளில் நவீன இருக்கை வசதிகள், படுக்கை வசதிகள், குளிர்சாதனம், கழிவறை வசதிகள் போன்று பல வசதிகள் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சொகுசு வகை பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கையினை அதிகரிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பல சலுகைகளை அறிவித்து வருகிறது என்று கூறியுள்ளனர். இதனிடையே இதுவரை இந்த சலுகை திட்டத்தின் கீழ், 3 பேர் பயனடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.