அத்துமீறலை தொடர்ந்து மாற்றப்பட்ட நாடாளுமன்ற பாதுகாப்பு வழிமுறைகள்
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்களால் தற்போது, நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான வாயிலில் நுழைய மக்களவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பார்வையாளர் பாஸ் முறைக்கு தடை விதித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சரி, இதுவரை கடைபிடித்து வந்த பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? என்னென்ன சோதனைகள் மேற்கொள்ளப்படும்?
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு 4-கட்ட பாதுகாப்பு சோதனைகளை கடந்து செல்ல வேண்டும்.
ஒவ்வொரு கட்டத்திலும் மெட்டல் டிடக்டர், ஸ்கேனர் மூலம் முழுமையான சோதனை செய்யப்படும்.
எம்.பி ஒருவரின் பரிந்துரை கடிதம் அவசியம்.
இந்த கடிதத்துடன், பார்வையாளரின் புகைப்படம், ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் உள்ளிட்ட வேண்டும். அவையும் இணையத்தில் பதிவேற்றப்பட்டு, சரிபார்க்கப்படும்.
card 2
பல்வேறு வாயில்களில் நடத்தப்படும் பல்வேறு கட்டப் பரிசோதனைகள்
நாடாளுமன்ற வளாகத்தின் முதல் நுழைவு வாயிலில் மெட்டல் டிடக்டர் மூலம் முழுமையான பரிசோதனை செய்யப்படும்.
பார்வையாளர்களின் வருகையின் காரணம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு, அது சரியாக இருந்தால் மட்டுமே, அனுமதி சீட்டு வழங்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர்.
அனுமதி சீட்டு வழங்கப்படும் இடத்தில் மீண்டும் புகைப்படம் எடுக்கப்பட்டு, பார்வையாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் பெறப்படும்.
எம்.பி ஒருவரின் பரிந்துரை கடிதம் சரிபார்க்கப்பட்டு, பின்னர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.
card 3
ஷூக்களை கழட்டி சோதனை செய்வது வழக்கம் இல்லை
நாடளுமன்ற நுழைவு வாயிலில் மீண்டும் ஒருமுறை மெட்டல் டிடக்டர் மூலம் பரிசோதனை செய்யப்படும்.
அதனை தொடர்ந்து பார்வையாளர் மாடத்திற்குள் செல்லும் முன்பாக மீண்டும் ஒருமுறை மெட்டல் டிடக்டர் மூலம் பரிசோதனை செய்யப்படும்.
அனால், இத்தனைக்கு மத்தியில், இது வரை, பார்வையாளர்களின் ஷூக்களை கழட்டி சோதனை செய்யும் வழக்கம் இருந்ததில்லை.
அது பார்வையாளர்களை அவமதிப்பது போன்று என்பதால் அதை செய்வதில்லை என கூறப்படுகிறது.
அதை பயன்படுத்தியே இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஷூக்களின் உள்ளே, புகை குண்டுகளை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளனர்.