NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக GPay, Paytm ஐ தொடர்புகொண்ட டெல்லி காவல்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக GPay, Paytm ஐ தொடர்புகொண்ட டெல்லி காவல்துறை
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக GPay, Paytm ஐ தொடர்புகொண்ட டெல்லி காவல்துறை

    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக GPay, Paytm ஐ தொடர்புகொண்ட டெல்லி காவல்துறை

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 19, 2023
    01:10 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் வங்கிக் கணக்குகளில் ஏதேனும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளதா என்பதை அறிய கூகுள்-பே மற்றும் பேடிஎம் நிறுவனத்தை டெல்லி காவல்துறை அணுகியுள்ளது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் சமீபத்தில் நீக்கப்பட்ட 'பகத் சிங் ரசிகர் மன்றம்' என்கிற பேஸ்புக் பக்கத்தின் விவரங்களை பகிர்ந்துகொள்ளுமாறு மெட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளது தில்லி காவல் துறை புலனாய்வு பிரிவு.

    குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரின் மொபைல் போன்கள் சேதமடைந்ததால் அவர்களின் வாட்ஸ்அப் அரட்டைகளை ரெட்ரீவ் செய்வதற்கு, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடக தளங்களை கையாளும் தாய் நிறுவனமான மெட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    card 2

    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் இதுவரை நடந்தவை 

    நாடளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறலை விசாரிக்கும் குழு, கடந்த டிசம்பர் 15, 16 மற்றும் 18 ஆகிய மூன்று தேதிகளில் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குற்றச் சம்பவத்தை மீண்டும் உருவாக்கியது.

    CRPF DG அனில் தயாள் சிங் தலைமையிலான விசாரணைக் குழுவின் குழு இதனை மேற்கொண்டது.

    மேலும், பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் விரைவில் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அழைக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    டிசம்பர் 13 அன்று திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் செய்ததற்காக, யாரிடமாவது பணம் பெறப்பட்டுள்ளதா என்பதை அறிய, குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் வங்கிக் கணக்கு விவரங்களையும் டெல்லி போலீஸார் சேகரித்துள்ளனர்.

    அதில் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்கும் அடங்கும்.

    card 3

    பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விசாரிக்கும் டெல்லி காவல்துறை 

    பாராளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து விசாரிக்கும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் குழுக்கள், சம்பவத்தை விசாரிக்க ஆறு மாநிலங்களில் தற்போது முகாமிட்டுள்ளன.

    இந்த மாநிலங்களில் ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகியவை அடங்கும்.

    இது தவிர, 50 சுயேச்சைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் டிஜிட்டல் மற்றும் வங்கி விவரங்கள் மற்றும் பின்னணியை ஆய்வு செய்கின்றனர்.

    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தொடர்பான மொபைல் போன்கள், உடைகள் மற்றும் காலணிகளின் எரிந்த பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானில் காவல்துறையினரால் மீட்கப்பட்டன.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் தொலைபேசிகளும் லலித் ஜாவிடம் இருந்தன. சம்பவம் நடந்த பின்னர், அவர் அதை உடைத்து, எரித்துவிட்டதாக கூறுகிறது காவல்துறை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    டெல்லி
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    நாடாளுமன்றம்

    திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக நாளை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு  மக்களவை
    எம்பி மஹுவா மொய்த்ரா மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க இருப்பதாக தகவல்  திரிணாமுல் காங்கிரஸ்
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2ம் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல் தேர்தல்
    பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை கொலை

    டெல்லி

    இந்திய விருந்தோம்பல் துறையின் முன்னோடி, ஓபராய் குழுமத்தின் தலைவர் பிஆர்எஸ் ஓபராய் காலமானார் ஹோட்டல்
    டெல்லி மாசுக்காற்று: மருத்துவர்கள் பரிந்துரைப்படி, ஜெய்ப்பூருக்கு செல்கிறார் சோனியா காந்தி சோனியா காந்தி
    ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில் பீகார் இளைஞரிடம் விசாரணை நடிகைகள்
    பேருந்துகளுக்கு தடை, செயற்கை மழை- காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசின் திட்டம் காற்று மாசுபாடு

    காவல்துறை

    ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ? தமிழக காவல்துறை
    கோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை - கொள்ளையனை பிடிக்க 5 சிறப்பு தனிப்படைகள் அமைப்பு கொள்ளை
    கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு சிறுமி கடத்தல் - விசாரணையினை தீவிரப்படுத்துமாறு முதல்வர் உத்தரவு  கேரளா
    இயக்குனர் மாரி செல்வராஜின் உதவி இயக்குனர் மூச்சுத் திணறலால் காலமானார் இயக்குனர்

    காவல்துறை

    கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி 20 மணிநேர தேடுதலுக்கு பிறகு மீட்பு  கேரளா
    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் தமிழ் படங்களின் தொகுப்பு நயன்தாரா
    திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக புது மணப்பெண் உயிரிழப்பு திருமணம்
    கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - குற்றவாளி அடையாளம் காணப்பட்டதாக தகவல்  கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025