LOADING...
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவைக்கு பெற்றோர் வரவேற்பு
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச பிரத்யேக பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவைக்கு பெற்றோர் வரவேற்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 11, 2025
04:21 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின் புதிய முயற்சியாக, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளைப் போன்று இலவச பிரத்யேக பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாத இறுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த சேவை, ஜூன் 1 முதல் செயல்பாட்டில் உள்ளது. பள்ளிக்கு செல்லும் வசதியின்றி, மாணவர்கள் தனியார் பள்ளிகளை தேட வேண்டிய நிலை ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி கல்வித் துறை மணலி புதுநகர், வெட்டுவாங்கேனி, எழில்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று மாநகராட்சி பள்ளிகளுக்கு இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சேவை

பாதுகாப்பு அம்சங்களுடன் சிறப்பு சேவை

இந்த பேருந்து சேவையில், வாகனத்தில் காப்பாளர் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேருந்து நேரம் பள்ளி நேரத்திற்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு, மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று வர ஆசிரியர்களும் தங்களது பங்களிப்பை வழங்குகின்றனர். சென்னை மாநகராட்சியின் இந்த ஏற்பாடு பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மழை காலங்களில் குழந்தைகளை 3 கி.மீ வரை நடக்கவைத்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய தொந்தரவு நீங்கியுள்ளது என பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ஒரு பெற்றோர் கூறியதாவது, "தனியார் பள்ளிக்கு குழந்தையை சேர்க்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் இப்போது மாநகராட்சி பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளோம். இந்த சேவை தனியார் பள்ளி அனுபவத்தை தருகிறது."