
ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம்: 4 பேர் கைது
செய்தி முன்னோட்டம்
ஹோலி பண்டிகை அன்று ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட விவகாரம் தொடர்பாக, ஒரு சிறார் உட்பட மூன்று இளைஞர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹோலி கொண்டாட்டத்தின் போது ஒரு இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து ஒரு ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொள்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இது குறித்து விசாரித்த டெல்லி போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
"உள்ளூர் உளவுத்துறையின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு வீடியோவில் இருந்த இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, ஒரு சிறார் உட்பட 3 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. வீடியோவில் காணப்பட்ட சம்பவம் நடந்தது குறித்து அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்." என்று டெல்லி போலீஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியா
அந்த பெண் அளிக்கும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்
டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த வீடியோவை முதலில் அந்த பெண் தான் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். அதன் பின், அதை நீக்கியுள்ளார்.
அவர் தற்போது பங்களாதேஷில் இருப்பதாகவும் தான் மனதளவிலும் உடலளவிலும் நலமாக இருப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
அந்த பெண் இது குறித்து டெல்லி காவல்துறையிலோ ஜப்பானிய தூதரகத்திலோ எந்த புகாரும் அளிக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் "மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் அந்த பெண் அளிக்கும் புகாரின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்" என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.