LOADING...
பஹல்காம் படுகொலை ஓராண்டு நிறைவு: NIA விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் மற்றும் இந்தியாவின் நடவடிக்கைகள் ஒரு பார்வை
பஹல்காம் படுகொலை ஓராண்டு நிறைவு

பஹல்காம் படுகொலை ஓராண்டு நிறைவு: NIA விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் மற்றும் இந்தியாவின் நடவடிக்கைகள் ஒரு பார்வை

எழுதியவர் Venkatalakshmi V
Apr 22, 2026
12:38 pm

செய்தி முன்னோட்டம்

பஹல்காம் படுகொலை நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், 26 அப்பாவி உயிர்களைப் பறித்த அந்தப் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த பாகிஸ்தான் சதிவலைகளை தேசிய புலனாய்வு முகமை (NIA) ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது. உள்ளூர் தேடுதல் வேட்டையாகத் தொடங்கிய இந்த விசாரணை, தற்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேசக் குற்றச்சாட்டாக உருவெடுத்தது. இந்த தாக்குதலை அடுத்து இந்தியா எடுத்த நடவடிக்கைகள் ஒரு பார்வை.

தொடர்பு

பாகிஸ்தான் தொடர்பு உறுதி செய்யப்பட்டது எப்படி?

இந்தச் சதியின் வேர்களைக் கண்டறிய என்.ஐ.ஏ மேற்கொண்ட "அறிவியல் ரீதியான புலனாய்வு" மற்றும் 2025 ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட பர்வைஸ் அகமது, பஷீர் அகமது ஜோதர் ஆகியோரின் வாக்குமூலங்கள் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தன. இவர்கள் அளித்த தகவலின்படி, தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு மூன்று பாகிஸ்தானிய பயங்கரவாதிகளுக்குப் பஹல்காம் பகுதியில் அடைக்கலம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. 2025 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்ட 1,597 பக்கக் குற்றப்பத்திரிகையில், லஷ்கர்-ஏ-தொய்பா (LeT) மற்றும் அதன் கிளை அமைப்பான டி.ஆர்.எஃப் (TRF) தலைவர்களே இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டது டிஜிட்டல் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள்

களத்தில் இறங்கிய பயங்கரவாதிகள் யார்?

பஹல்காமின் பைசரன் புல்வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று முக்கியப் பயங்கரவாதிகள் பைசல் ஜாட், ஹபீப் தாஹிர் மற்றும் ஹம்சா ஆப்கானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மத ரீதியாக மக்களைப் பிரித்துப் பார்த்து, குறிப்பாக இந்து ஆண்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சாட்சிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு நவீன எம்4 ரகத் துப்பாக்கிகள் மற்றும் தாக்குதலைப் படமெடுக்க கேமராக்கள் பாகிஸ்தான் கையாளுநர்களால் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சுற்றுலா பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதே இவர்களின் முதன்மை நோக்கமாக இருந்துள்ளது.

Advertisement

ஆபரேஷன் மகாதேவ்

ஆபரேஷன் மகாதேவ்: பயங்கரவாதிகள் ஒழிப்பு

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் ஆட்டம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 'ஆபரேஷன் மகாதேவ்' என்ற பெயரில் பாதுகாப்புப் படைகள் நடத்திய அதிரடி ராணுவ நடவடிக்கையில், 2025 ஜூலை 29 அன்று ஸ்ரீநகர் அருகே உள்ள டச்சிகாம் காடுகளில் மூன்று பாகிஸ்தானிய பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேமராக்களில் இருந்த காட்சிகள், பஹல்காம் தாக்குதலுடன் அவர்களை நேரடியாக இணைக்கும் தடயவியல் ஆதாரங்களாக மாறின. இதன் மூலம் கொலையாளிகள் அனைவரும் களத்திலேயே ஒழிக்கப்பட்டனர்.

Advertisement

தற்போதைய நிலை

தற்போதைய நிலை மற்றும் சர்வதேச நடவடிக்கை

நேரடியாகத் தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டாலும், இந்தத் தாக்குதலுக்கு நிதியுதவி செய்த "வெள்ளை காலர்" பயங்கரவாத வலையமைப்பை என்.ஐ.ஏ தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. பாகிஸ்தானில் அமர்ந்துகொண்டு சதித் திட்டம் தீட்டிய சாஜித் ஜாட் போன்றவர்களைச் சர்வதேசச் சட்டங்களின் மூலம் நீதியின் முன் நிறுத்த இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. பஹல்காம் படுகொலை போன்ற ஒரு சம்பவம் இனி ஒருபோதும் நிகழக் கூடாது என்பதில் தேசம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

Advertisement