'இந்தியா ஒருபோதும் பணியாது': பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு தினம்; பிரதமர் மோடி உருக்கம்
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார். "இந்தியா பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் தலைவணங்காது" என்று உறுதிபடத் தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் LeT பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் துயரச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எக்ஸ்(X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர்,"கடந்த ஆண்டு இதே நாளில் பஹல்காம் தாக்குதலில் இழந்த அப்பாவி உயிர்களை நினைவு கூர்கிறேன். அவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள். இந்த இழப்பைச் சந்தித்துள்ள குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் என்றும் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Remembering the innocent lives lost in the gruesome Pahalgam terror attack on this day last year. They will never be forgotten. My thoughts are also with the bereaved families as they cope with this loss.
— Narendra Modi (@narendramodi) April 22, 2026
As a nation, we stand united in grief and resolve. India will never bow to…
பாதுகாப்பு ஏற்பாடுகள்
காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பஹல்காம் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களில் கூடுதல் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் மீண்டும் ஏதேனும் நாசவேலைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் QR குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டைகள் மற்றும் நவீனக் கண்காணிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.