Page Loader
சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை
திருடப்பட்ட 40 லட்சம் ரூபாயில், 38 லட்சம் ரூபாய் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது

சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை

எழுதியவர் Sindhuja SM
Mar 07, 2023
04:40 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி செங்கோட்டை அருகே பைக் ஓட்டுநரிடம் ரூ.40 லட்சம் கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். டிராபிக் சிக்னலில் பைக் ஓட்டுநர் நிற்கும்போது அந்த நபரின் பையில் இருந்த பணத்தை திருடர்கள் திருடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வீடியோவில், கடும் போக்குவரத்து நெரிசலால் சூழப்பட்ட ஒரு பைக்கை மூன்று ஆண்கள் நெருக்கமாகப் பின்தொடர்வதைக் காணலாம். பைக் சரியாக சிக்னலில் நிற்கும்போது, பைக்கை பின்தொடர்ந்து வந்த திருடர்கள் பைக் ஓட்டுனரின் பையில் இருந்த பணத்தை திருடி இருக்கின்றனர். இதை திருடியவர்களில் மூன்றில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆகாஷ் மற்றும் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த கும்பல் முக்கியமாக பைக் ஓட்டுபவர்களை குறிவைப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

திருட்டு நடக்கும் போது பதிவான சிசிடிவி காட்சிகள்