
'Paytm' செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
சென்னை மெட்ரோ தனது பயணிகளுக்கு பலதரப்பட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கிறது.
அதில் ஒன்றாக டிக்கெட் பெறும் முறையினை எளிதாக்க ஏற்கனவே வாட்ஸ்-அப், க்யூ-ஆர் கோடு உள்ளிட்ட வசதிகள் உள்ள நிலையில் தற்போது 'Paytm'-செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை சென்னை நந்தனம் மெட்ரோ ரயில்நிலைய அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் சித்திக் துவங்கி வைத்துள்ளார்.
அதன்படி இச்செயலியின் transit-பகுதிக்குள் சென்று சென்னை மெட்ரோ ரீசார்ஜ் என்னும் ஆப்ஷனை தேர்வுச்செய்து, புறப்படுமிடம், போகவேண்டிய இடம் உள்ளிட்ட விவரங்களை பதிவுச்செய்து டிக்கெட்டுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும்,ஒரு முன்பதிவின் மூலம் 6 டிக்கெட்டுகள் வரை பெறமுடியும் என்றும், இந்த செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் 20% கட்டணத்தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு
#NewsUpdate | இனி paytm மூலமும், மெட்ரோ டிக்கெட்டை பதிவு செய்யலாம்!#SunNews | #ChennaiMetro | #Paytm | @cmrlofficial pic.twitter.com/RI1X3h4BNi
— Sun News (@sunnewstamil) August 4, 2023