
ராகுல் காந்தியின் தகுதி நீக்க எதிரொலி - அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ்
செய்தி முன்னோட்டம்
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதன் எதிரொலியாக தற்போது டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டுமென அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
சட்ட விதிகளின்படி தகுதி இழப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் தனது அதிகாரபூர்வ பங்களாவை அவர் காலி செய்ய வேண்டும்.
அதன்படி தற்போது ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்டுள்ள நோட்டீஸில் ஏப்ரல் 22ம் தேதிக்குள் பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸினை மக்களவை வீட்டு வசதி குழுவானது இன்று((மார்ச்.,27) அனுப்பியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு மக்களவை எம்.பி.யாக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவருக்கு 12, துக்ளக் லேன் பங்களா ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ராகுல் காந்தியின் தகுதி நீக்க எதிரொலி
வீட்டை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ்https://t.co/5xTECyVZGq | @RahulGandhi | @INCIndia | #rahulgandhi | #Delhi | #Congress | #News7tamil | #News7tamilupdates pic.twitter.com/E7FojTeu6D
— News7 Tamil (@news7tamil) March 27, 2023