Page Loader
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மே 3 இல் தொடங்கும்! 
ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் - எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு நோட்டீஸ்

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மே 3 இல் தொடங்கும்! 

எழுதியவர் Siranjeevi
Apr 18, 2023
04:00 pm

செய்தி முன்னோட்டம்

சிஐடியு தொழிற்சங்கம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு போக்குவரத்துறையிடம் நோட்டீஸ் அளித்துள்ளது. எனவே மே 3-ஆம் தேதி பிறகு வேலைநிறுத்ததில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து கழகங்களின் தலைவர் மற்றும் போக்குவரத்து கூடுதல் தலைமை செயலாளரிடம் நோட்டீஸை வழங்கினர். மேலும், அவர்கள் தெரிவிக்கையில், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு பதிலாக நிரந்தர ஓட்டுநர்களை பணியமர்த்துமாறு வலியுறுத்தியுள்ளனர். இந்த வேலை நிறுத்தமானது மே மாதம் முதல் 6 வாரம் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதனால் சொந்த ஊருக்கு பயணம் செல்வோருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post