Page Loader
கோவையில் 2 பயிற்சி மருத்துவர்கள் வீட்டில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை
NIA அதிகாரிகள் கர்நாடகாவிலிருந்து இங்கே வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

கோவையில் 2 பயிற்சி மருத்துவர்கள் வீட்டில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை

எழுதியவர் Venkatalakshmi V
May 21, 2024
11:24 am

செய்தி முன்னோட்டம்

கோவை சாய்பாபா காலனியில் தங்கியுள்ள பயிற்சி மருத்துவர்களின் இல்லத்தில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை செய்து வருகின்றனர். NIA அதிகாரிகள் கர்நாடகாவிலிருந்து இங்கே வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஊடக செய்திகளின் படி, சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு தொடர்பாக இந்த சோதனை நடை பெறுகிறது எனவும், கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரு மருத்துவர்களுக்கும் குற்றவாளிகளுக்கு தொடர்பு இறுக்கப்பதாக தேசிய புலனாய்வு முகமை சந்தேகிப்பதாக கூறப்பட்டது. ஒரு சில செய்திகள், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கு ஒன்று தொடர்பாக மருத்துவர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் NIA அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறுகிறது.

embed

NIA அதிகாரிகள் சோதனை

🔴LIVE : கோவையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை https://t.co/PrMhquybKK— Thanthi TV (@ThanthiTV) May 21, 2024