
புதிதாக கட்டப்பட்ட வீடு; கிரஹப்ரவேசத்திற்கு முன்னரே சரிந்து விழுந்த சோகம்
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், உப்பனார் வாய்க்காலின் இருபுறமும் சுற்றுச்சுவர் கட்டும் பணியும், நடைபாதை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக இந்த பணி நடைபெற்று வரும் நிலையில், சுற்று சுவர் கட்டுவதற்காக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆற்றின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டது.
இதனால் உப்பனார் வாய்க்கால் கரையோரம் உள்ள வீடுகள் சேதம் அடைந்தன.
பல வீடுகள் சாய்ந்து காணப்பட்டது. இதனை மேற்பார்வையிடுவதற்காக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட பொதுமக்கள் அங்கே வந்திருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம், வாய்க்கால் கரையோரம் கட்டப்பட்டிருந்த புதிதாக கட்டி புதுமனை புகுவிழா நடைபெற இருந்த 3 மாடி வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது.
ட்விட்டர் அஞ்சல்
புதிதாக கட்டப்பட்ட வீடு, சரிந்து விழுந்த சோகம்
#Watch | புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் அருகே கட்டப்பட்ட 2 மாடி கட்டிடம் அடியோடு சரிந்து விழுந்ததால் பரபரப்பு
— Sun News (@sunnewstamil) January 22, 2024
வரும் 1ம் தேதி புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்ததால், கதறி அழுத வீட்டின் உரிமையாளர்கள் #SunNews | #Puducherry pic.twitter.com/rBKKRJLetw