2023-24 கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி
2023-24 கல்வியாண்டு முதல் கல்லூரிகளில் புதிய மாதிரித்திட்டம் அறிமுகப்படுத்துவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய மாதிரி பாடத்திட்டம் என்பது பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் உரிமைக்கு மதிப்பளித்தே தமிழக அரசு இந்த திட்டத்தினை அங்கீகரித்துள்ளது"என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கான நோக்கத்திலேயே இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. பாடப்பிரிவுகளின் இடையே 75%இணைத்தன்மை இல்லாத காரணமாக பணி ஆணை பெற்றபின்னரும் பணியில் சேர முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களின் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த புதிய பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட 301 மாதிரி பாடங்கள்
2018-2019ம்கல்வியாண்டிற்கு பிறகு பாடத்திட்டமானது மறுசீரமைக்கப்படவில்லை. அதனை ஈடுசெய்யும் வகையிலும் இந்த புதிய மாதிரித்திட்டம் தரமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த புதிய மாதிரித்திட்டம் குறித்த நோக்கம் உயரிய கல்வியாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கிடையே சரியாக போய் சேரவேண்டும் என்பதாலே இந்த விளக்கமானது கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2021ம்ஆண்டு தமிழ்நாடு மாநில உயர்கல்விமன்ற சட்டமான 1992, பிரிவு 10(2)விதிப்படி ஐஐடி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் 10 கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி உள்ளிட்ட பிறக்கல்லூரிகளிலிருந்து 9.22பேராசிரியர்கள் பாடதிட்டக்குழு உறுப்பினர்களாக மாற்றப்பட்டு 870 பாடதிட்டக்குழு அமைத்து ஆலோசித்து 301 மாதிரி பாடங்கள் மிகத்தரமான வகையில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதில் 166 இளநிலைப்பாடங்கள் மற்றும் 135 முதுநிலைப்பாடங்கள் உள்ளிட்டவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.