9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'திராவிட மொழி குடும்பம்' என்னும் பாடம் சேர்ப்பு - ஐ.லியோனி பேட்டி
தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, இன்று(ஜூன்.,19)தமிழக பாடநூல் கழகத்தின் நாகப்பட்டின மண்டல அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வினை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்பொழுது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தினை கலைஞர் திறந்து வைத்தது குறித்த பாடமானது நீக்கப்பட்டது". "அதனால் இந்தாண்டு 9ம் வகுப்பின் தமிழ் பாடப்புத்தகத்தில் 'திராவிட மொழி குடும்பம்' என்னும் பாடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர்,"தலைமை கழக பேச்சாளர்கள், அமைச்சர்கள் ஆகியோர் மேடையில் கண்ணியமாக பேசவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்". "பாஜக மகளிர் அணி நிர்வாகியான குஷ்பு'வை தரக்குறைவாக பேசியது கண்டனத்திற்குரியது". "இதுபோல் மீண்டும் நடக்காமல் இருக்க அவ்வாறு பேசியவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கியுள்ளோம்" என்று தெரிவித்தார்.