சென்னையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக புதிய அறிமுகம்
சென்னை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல ஏராளமான மக்கள் தற்போது மெட்ரோ ரயிலில் தான் தங்கள் பயணத்தினை மேற்கொள்கிறார்கள். மெட்ரோ பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில், பயணிகள் வசதியினை கருத்தில் கொண்டு சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம்-RMZ ஒன் பாராமவுண்ட், போரூர் இடையே தனியார் நிறுவன வாகன இணைப்பு சேவையினை மெட்ரோ துவங்கியுள்ளது. இந்த வசதியினை பாஸ்ட் டிராக் மொபைல் ஆப் மூலம் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், இந்த பயணத்தினை ஒரு நபர் மேற்கொள்ள ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.