NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு 
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Apr 19, 2023
    06:59 pm
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு 
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு

    தமிழ்நாடு சட்டசபையில் இன்று(ஏப்ரல்.,19) அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு, ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு அக்னி தீர்த்த படித்துறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி அரசு மானியம் வழங்கப்படும். திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அந்த திருமணத்திற்கு 4 கிராமில் பொன் தாலி திருக்கோயில் சார்பில் வழங்கப்படும். கிராமத்தெய்வங்களின் சுடுமண் சிற்பங்களை பாதுகாத்து சீரமைக்கும் பணி 6 திருக்கோயில்களில் ரூ.3கோடி மதிப்பீட்டில் செய்யப்படும். திருப்பைஞ்ஞீலி, பழையாறை, திண்டல் உள்ளிட்ட 15 திருக்கோயில்களில் ரூ.25.98 கோடி மதிப்பீட்டில் ராஜக்கோபுரங்கள் கட்டப்படும். 19 திருக்கோயில்களில் புதுத்தேர்கள் ரூ.11.83கோடியில் உருவாக்கப்படும். 53 திருக்கோயில்களில் ரூ.10.25கோடி செலவில் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்படும்.

    2/2

    மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்

    மேலும், 46 திருக்கோயில்களில் திருக்குளங்கள் ரூ.25.94 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3000லிருந்து ரூ.4,000ஆக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500 லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஓலைச்சுவடிகள் மற்றும் மூலிகை ஓவியங்கள் ஆய்வு மையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்படும். பக்தர்களுக்காக பழனி-இடும்பன் மலை, அனுவாவி, திருக்கழுக்குன்றம், திருநீர்மலை ஆகிய மலை பகுதிகளில் அமைந்துள்ள 4 திருக்கோயில்களில் கம்பிவட ஊர்தி ரூ.66 கோடி மதிப்பில் அமைக்கப்படும். ஸ்வாமிமலை திருக்கோயிலில் பக்தர்கள் நலனுக்காக ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைக்கப்படும். மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    சேகர் பாபு
    கோவில்கள்

    தமிழ்நாடு

    பட்டு வேட்டி, சட்டை அணிந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஆர்.என்.ரவி
    தமிழகத்தில் குறைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! காரணம் என்ன? சுற்றுலாத்துறை
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி இறந்த 2 சிறார்களுக்கு நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு  மு.க ஸ்டாலின்

    சேகர் பாபு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி தமிழ்நாடு
    331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு  தமிழ்நாடு
    சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை  தமிழ்நாடு

    கோவில்கள்

    3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள்  தமிழ்நாடு
    திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு  திருநெல்வேலி
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு சென்னை
    புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை தந்தம் முதல்வரிடம் ஒப்படைப்பு புதுச்சேரி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023