நேபாளத்தில் நிலச்சரிவில் 320 இந்தியர்களை காணவில்லை; தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்
செய்தி முன்னோட்டம்
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் போதேகோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. சித்வான், நவால்பராசி, நுவாக்கோட் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இப்பேரழிவில் 320 இந்தியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என இந்திய வெளியுறவுத் துறை கவலை தெரிவித்துள்ளது. எனினும், நம்பிக்கை செய்தியாக நேபாளத்தின் வெள்ளப் பாதிப்பு பகுதியிலிருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 21 பேர், காத்மாண்டுவிலிருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை டெல்லி வந்தடைந்தனர். காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தவிர, திரிசூலி-1 நீர்மின் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 33 இந்தியத் தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Moving to hear experiences of rescued pilgrims. pic.twitter.com/bg9tSofA1H
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 28, 2026
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Received a group of 21 pilgrims from Tamil Nadu who were rescued from the floods in Nepal.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 28, 2026
Was moved to hear their experience first hand. Thank the @NepaliArmyHQ and Government for this rescue effort. Appreciate @IndiaInNepal’s facilitation of their smooth return to India. pic.twitter.com/P0cNsY5exF
அறிக்கை
இந்தியர்களின் நிலை & வெளியுறவுத் துறை அறிக்கை
320 இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 100 இந்திய வம்சாவளி வெளிநாட்டவர்களும் இப்பட்டியலில் அடங்குவர்.
திபெத் (சீனா) பகுதியில் 400 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களில் 96 பேர் தரைவழியாக நேபாளத்திற்குள் நுழைந்துள்ளனர்.
கைலாஷ் யாத்திரை சென்ற மேலும் 6 இந்தியர்களை நேபாளம் வழியாக இந்தியாவிற்கு அழைத்து வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ரசுவா மாவட்டத்தில் சிக்கியிருந்த 117 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் 85 இந்தியர்கள் நேபாள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
நிவாரணம்
நிவாரண பொருட்களைக் குவிக்கும் இந்தியா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமரிடம் தொலைபேசியில் பேசி அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
ஆகஸ்ட் 26 சென்ற முதல் விமானத்தில் 10 டன் எடையுள்ள கூடாரங்கள், போர்வைகள், மருத்துவ பொருட்கள் அனுப்பப்பட்டன.
நேற்று அனுப்பப்பட்ட இரண்டாவது விமானத்தில் 37.5 டன் நிவாரணப் பொருட்கள் (ஜெனரேட்டர்கள், நீர் சுத்திகரிப்பு பம்புகள், உணவுகள்) அனுப்பப்பட்டன.
இன்று சென்ற மூன்றாவது விமானத்தில் மேலும் 13 டன் எடையுள்ள அவசரகால குடிநீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் மற்றும் உணவுகள் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.