Loading...
'தேர்வுத் தாள் கசிவை அரசியல் ஆக்காதீர்கள்': எதிர்க்கட்சிகளுக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கடும் கண்டனம்
எதிர்க்கட்சிகளுக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கடும் கண்டனம்

'தேர்வுத் தாள் கசிவை அரசியல் ஆக்காதீர்கள்': எதிர்க்கட்சிகளுக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கடும் கண்டனம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 22, 2026
09:23 pm

செய்தி முன்னோட்டம்

NEET-UG வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பாக, அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயலக் கூடாது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கோரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சுய அரசியல் செய்வதை விட்டுவிட்டு, இப்பிரச்சனைக்கு தீர்வு காண அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். ராகுல் காந்தி சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நட்டா, காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற பல வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடைபெற்றதை நினைவுகூர்ந்தார். குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மைகள் அனைத்தும் பொதுமக்கள் முன் வெளிப்படையாக வைக்கப்படும் என்றும், பொறுப்புள்ள அரசாக பா.ஜ.க அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் என்றும் உறுதி அளித்தார்.

விவாதம்

நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார்

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நேரில் சந்தித்துப் பேசியதைச் சுட்டிக்காட்டிய நட்டா, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆழமான விவாதம் நடத்த மத்திய அரசு முழுமையாகத் தயாராக உள்ளது என்றார்.

ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றமே இதைப் பற்றிப் பேசச் சரியான இடம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசியல் எதிர்ப்புகளைத் தாண்டி, அனைத்துப் பிரிவினரும் இணைந்து மாணவர்களின் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண முன்வர வேண்டும் என நட்டா கேட்டுக்கொண்டார்.

விசாரணை அமைப்புகளின் அறிக்கை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ADVERTISEMENT