Loading...
மாணவர்கள் போராட்டத்திற்கு இறங்கி வந்த மத்திய அரசு; எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அழைப்பு
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது

மாணவர்கள் போராட்டத்திற்கு இறங்கி வந்த மத்திய அரசு; எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அழைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 23, 2026
04:45 pm

செய்தி முன்னோட்டம்

நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களுக்கு வசதியான நேரத்தில், எந்த இடத்திலும் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.

அழைப்பின் விவரங்கள்

மத்திய அரசு சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பின் விவரங்கள்

மாணவர் அமைப்புகளுக்கு ஏற்கனவே நான்கு முறை முறைப்படியான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் சிங்,"இளைஞர்களின் நலன் கருதி, அவர்களின் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் எந்தப் பிரச்சனை குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. இதில் எங்களுக்கு எந்த கௌரவப் பிரச்சனையும் இல்லை* என்றார்.

"மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவின் அலுவலகத்திலோ அல்லது அவரது இல்லத்திலோ இந்தச் சந்திப்பு நடைபெறலாம். நானும், அமைச்சர் ஜே.பி. நட்டாவும் இதில் நேரில் பங்கேற்போம். பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண முடியும்."

நிபந்தனை

மாணவர் அமைப்புகளின் நிபந்தனை

மத்திய அரசின் இந்த அழைப்பை ஏற்க மறுத்துள்ள CJP அமைப்பின் தலைவர் அபிஜித் திப்கே மற்றும் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா ஆகியோர், அரசுத் தரப்பு அமைக்கும் இடத்திற்குச் சென்று பேச முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமானால் அது நடுநிலையான ஒரு இடத்திலோ அல்லது போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தரிலோ தான் நடக்க வேண்டும் என மாணவர் தரப்பு நிபந்தனை விதித்துள்ளது.

ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொண்டே, மறுபுறம் காவல்துறையை கொண்டு மாணவர்கள் மீது அடக்குமுறையையும் தடியடியையும் கட்டவிழ்த்து விடுவதாகக் CJP குற்றம் சாட்டியுள்ளது.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT