ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்டரை தொடங்கியது பாதுகாப்புப் படைகள்
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீரின் தோடாவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் வெடித்தது.
டோடா மாவட்டத்தின் மேல் பகுதியில் உள்ள கோலி-காடி காடுகளில் இன்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோலி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
தேடுதல் நடவடிக்கையின் போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் 2 முதல் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்ததால் துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது.
இந்தியா
காட்டுக்குள் தப்பிச் சென்ற பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை
நேற்று கதுவாவின் மச்செடி பகுதியில் ரோந்துக் குழுவினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர்.
நேற்று பிற்பகல் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் இராணுவ டிரக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பின்னர் அருகில் உள்ள காட்டுக்குள் தப்பிச் சென்றனர். அவர்களைக் கண்டுபிடித்து பிடிப்பதற்காக அதிகாரிகள் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
இந்நிலையில், அவர்களை பிடிப்பதற்காக சென்ற பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, என்கவுண்டர் தொடங்கியுள்ளது.
நேற்று நடந்த தாக்குதலுக்கு பழி வாங்காமல் விடமாட்டோம் என பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே இன்று மதியம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.