லோக்சபா தேர்தல் - நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போட்டியிட விருப்பம்
2024ம் ஆண்டில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது, தற்போதிருந்தே அதற்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக அரசு சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார் என்று தெரிகிறது. தொடர்ந்து, 2019ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் தமிழகத்தின் 6 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இதனால் தான் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வான நிர்மலா சீதாராமன் மற்றும் முருகன் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டது. இதனிடையே நடக்கவிருக்கும் அடுத்த லோக்சபா தேர்தலிலும் பாஜக வெற்றிப்பெற அதிக வாய்ப்புள்ளது என்று கருத்துக்கணிப்புகள் கூறுவதாக தெரிகிறது.
பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிட ஆர்வம்?
இதன் காரணமாக தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிட பலரும் விரும்புகின்றனர். அதன்படி, திருநெல்வேலி தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ. பதவியில் உள்ள நயினார் நாகேந்திரன் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார் என்று தெரிகிறது. அவரைத்தொடர்ந்து, கோவை தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ. பதவியில் உள்ள வானதி சீனிவாசனும் லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவதாகவும், இதற்கு மேலிடமும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் வெற்றிப்பெற்றால் மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும் என்று இவர்கள் நம்புவதாக அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனராம். இதில் இவர்கள் தோல்வியடைந்தாலும் அவர்களது எம்.எல்.ஏ. பதவி பறிப்போகாது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.