NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாசாவுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாசாவுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ
    ஆர்டிமிஸ் அக்கார்ட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்தியா

    நாசாவுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 23, 2023
    02:06 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார் இந்திய பிரதமர் மோடி.

    இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், கடந்த இரண்டு நாட்களில் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் முதலீடு என பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன.

    இந்நிலையில், விண்வெளி திட்டங்கள் தொடர்பாகவும் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    மனிதர்களை உள்ளடக்கிய விண்வெளித் திட்டங்களை அமெரிக்காவின் நாசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோ ஆகிய விண்வெளி அமைப்புகள் இணைந்து செயல்படுத்தவிருப்பதாக அமெரிக்க நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

    இஸ்ரோ

    ஆர்டிமிஸ் அக்கார்ட்ஸில் கையெழுத்திட்ட இந்தியா: 

    அதே போல் ஆர்டிமிஸ் அக்கார்ட்ஸ் ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. விண்வெளியை பாதுகாப்பாகவும், பயனுள்ள வகையிலும் அனைத்தும் நாடுகளும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் இந்த ஆர்டிமிஸ் அக்கார்ட்ஸ் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இந்த ஒப்பந்தத்தில் ஏற்கனவே அமெரிக்கா உட்பட 26 நாடுகள் கையெழுத்திட்டிருக்கும் நிலையில், இந்தியாவும் தற்போது கையெழுத்திட்டிருக்கிறது.

    இந்த ஒப்பந்தத்தின் படி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நாடுகள், அமைதியான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

    மேலும், சில நாடுகள் இணைந்து, விண்வெளியில் எந்த நாட்டு வீரர்கள் ஆபத்தில் இருந்தாலும் உதவ வேண்டும் என்பது உட்பட பல்வேறு குறிப்புகள் ஆர்டிமிஸ் அக்கார்ட்ஸ் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    நாசா
    இந்தியா
    அமெரிக்கா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இஸ்ரோ

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் விண்வெளி
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது தமிழிசை சௌந்தரராஜன்
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை இந்தியா

    நாசா

    நாசாவின் லூசி விண்கலம் புதிய சிறியகோளை கண்டறிந்துள்ளது! உலகம்
    வரலாற்றில் முதல்முறை - நாசாவின் ஹப்பிள் மூலம் கணிக்கப்பட்ட ஆச்சர்யம் தொழில்நுட்பம்
    உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில் விண்வெளி
    விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய வீராங்கனை! விண்வெளி

    இந்தியா

    இந்தியாவில் ரூ.10,000 கோடியாக உயர்ந்த ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி ஆப்பிள்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 19 தங்கம் வெள்ளி விலை
    MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு  பள்ளிக்கல்வித்துறை
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்

    அமெரிக்கா

    அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த அமெரிக்க அறிக்கை 'நேர்மறையானது': ரஷ்யா  உலகம்
    பினான்ஸ் கிரிப்டோ தளத்தின் மீது புகார்களை அடுக்கிய SEC.. என்ன நடந்தது? சீனா
    டெஸ்லா நிறுவனத்தின் மீது தொடர்ந்து குவியும் 'இனப் பாகுபாடு' குற்றச்சாட்டுக்கள்! டெஸ்லா
    AR ஹெட்செட் ஸ்டார்அப் நிறுவனமான மிராவை வாங்கிய ஆப்பிள்.. என்ன ஒப்பந்தம்? ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025