
தொடர்ச்சியாக குறி வைக்கப்படும் நாங்குநேரி சின்னத்துரை; விலகாத மர்மம்
செய்தி முன்னோட்டம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சின்னத்துரை(20), 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில், பள்ளிக்கல்வி முடிக்கும் போது, வீடு புகுந்து அரிவாளால் சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு பிறகு, சின்னத்துரை நீண்ட நாட்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தமிழக அரசும், அரசியல் கட்சித் தலைவர்களும் உத்தரவாதம் அளித்த நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக முன்னேற்றம் காணும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதோடு தமிழக அரசும் அவரது படிப்பிற்கான செலவை ஏற்பதாக அறிவித்தது. அதன் காரணமாக தற்போது அவர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று மர்ம கும்பலால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சாதிய அரசியலாக தற்போது உருவெடுத்து வருகிறது.
விவரம்
தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்
சமீபத்தில், இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்படுத்திய சிலர், சின்னதுரையை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்து கடுமையாக தாக்கி, அவரிடமிருந்து அலைபேசியும் மோதிரமும் பறித்துச் சென்றுள்ளனர்.
இதன் போது, ஏற்கனவே வெட்டுப்பட்ட வலது கையில் மீண்டும் காயம் ஏற்பட்டது. இதற்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சின்னத்துரை தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இந்த தாக்குதலுக்குப் பின்னணி தொடர்பான விசாரணையில், போலீசார் அவரிடம் இன்ஸ்டாகிராம் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளைத் திறக்க அவரிடம் username மற்றும் பாஸ்வோர்ட் குறித்து கேட்ட போது, அவர் இரண்டையும் மறந்துவிட்டதாக கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் அவரை தனியாக அழைத்தது யார், என்ன காரணம் என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.
தற்போது இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக காவல்துறை இரண்டு தனிப்படைகளை அமைத்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
நெல்லையில் அடுத்த சம்பவம்.. சின்னத்துரைக்கு என்ன நடந்தது? விசாரணையில் வெளியான திடுக் தகவல்! Nanguneri |#NakkheeranKalam #NakkheeranTV #Nanguneri pic.twitter.com/gyXwgAjPUX
— Nakkheeran (@nakkheeranweb) April 17, 2025
சாதிவெறி
சாதிவெறி தாக்குதலிலும் துவழாத சின்னதுரை
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி சின்னதுரையை வீடு தேடி வந்து சக மாணவர்கள் அரிவாளால் தாக்கினர்.
அதை தடுக்க சென்ற அவரது தங்கை சந்திரா செல்வியையும் அரிவாளால் தாக்கினர்.
சின்னதுரையை சாதி ரீதியான விரோதத்துடன் தாக்கியதாக கைதான மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
சக மாணவர்களால் அரிவாளால் தாக்கப்பட்ட சின்னத்துரைக்கு, வலது கையில் தோள்பட்டை மற்றும் இடது கையில் முழங்கைக்கு கீழே ஏற்பட்ட வெட்டுக்காயங்களின் தாக்கத்தால் கையை முழுமையாக தன்னிச்சையாக இயக்க முடியவில்லை.
மருத்துவமனையிலிருந்தே காலாண்டுத் தேர்வை எழுதிய சின்னதுரை, சிகிச்சை நடைபெற்று வந்ததாலும், தன்னால் கையை இயக்க முடியாதலும் ஸ்க்ரைபர் உதவியுடன் தான் பொதுத்தேர்வை எழுதினார்.
அடக்குமுறைகள் இருந்தாலும் சின்னதுரை, தேர்வில் 469 மதிப்பெண்கள் எடுத்து சாதித்துக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.