
நாகை டூ இலங்கை கப்பல் போக்குவரத்து : துவக்க விழா ஒத்திவைப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு-நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை செல்ல பயணிகள் போக்குவரத்து கப்பல் சோதனை ஓட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இதன் கேப்டன் பிஜு ஜார்ஜ் தலைமையிலான 14 ஊழியர்கள் கொண்ட குழுவானது இந்த சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டது.
இதன் சோதனையோட்டம் வெற்றிப்பெற்றதையடுத்து இந்த பயணிகள் கப்பல் பயணம் இன்று(அக்.,10)முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திடீரென இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையின் துவக்க விழா இன்று நடைபெறாது என்று கூறி ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.
மேலும், தவிர்க்க முடியாத சில நிர்வாக காரணங்களால் இன்று துவங்கவிருந்த நாகப்பட்டினத்தில் இருந்து 60கடல் மைல் தொலைவிலுள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல் போக்குவரத்து வரும் அக்.,12ம்தேதி காலை 7 மணிக்கு துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
கப்பல் போக்குவரத்து
#JUSTIN | நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து 12ஆம் தேதிக்கு மாற்றம்#Nagai | #Nagapattinam | #SriLanka pic.twitter.com/ckErsRGtjb — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 10, 2023