Page Loader
பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன்; டெல்லி போலீஸ் விசாரணை 
பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன் குறித்து டெல்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது

பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன்; டெல்லி போலீஸ் விசாரணை 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2023
10:01 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில், இன்று அதிகாலை, 5:00 மணிக்கு சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்தது. இதை குறித்து, பிரதமரின் இல்லத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர், உடனே டெல்லி காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர். பிரதமரின் இல்லம் அமைந்துள்ள பகுதியில், புகைப்படம் எடுக்கவோ, ட்ரோன்கள் பறக்கவோ அனுமதியில்லை. இந்த மர்ம ட்ரோன் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர். "அருகிலுள்ள பகுதிகளில் முழுமையான தேடுதல் நடத்தப்பட்டது, ஆனால் அது போன்ற பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையையும் தொடர்பு கொண்டதில், பிரதமர் இல்லத்திற்கு அருகில் பறக்கும் பொருள் எதையும் அவர்களால் கண்டறிய முடியவில்லை" என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

பிரதமர் இல்லத்தின் மேல் பரந்த மர்ம ட்ரோன்