
'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து
செய்தி முன்னோட்டம்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா, புதன்கிழமை வழக்காடு மன்றத்தில் பேசுகையில், மும்பையில் உள்ள நீதிமன்றங்கள் ஒரு நாள் கூட வேலை செய்வதை நிறுத்துவதில்லை என்று கூறியுள்ளார்.
அவரின் இந்த கருத்து வழக்கறிஞர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னையை கலங்கடித்த மிக்ஜாம் புயலால் சென்னை முழுவதும் பெய்த மழையினாலும், தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை அடையவோ அல்லது விசாரணைக்கு வரவோ இயலவில்லை என்பதால், வழக்குகளை ஒத்தி வைத்த போது அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தபோது, தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் வழக்குத் தாள்களை அணுக முடியவில்லை என்று கூறி அவர்கள் ஒத்திவைக்க அணுகியபோது அவர் இதை தெரிவித்துள்ளார்.
card 2
"அடாது மழையிலும் பணி புரியும் மும்பை நீதிமன்றம்"
குறிப்பாக ஒரு பெண் வக்கீல் தனது வீட்டைச் சுற்றி கடுமையான நீர்நிலைகள் இருப்பதாக புகார் கூறியதை அடுத்து, தலைமை நீதிபதி, "ஒவ்வொரு ஜூலை மாதமும் மழைக்காலத்தில் மும்பையில் இது ஒரு பொதுவான விஷயம். முழு நகரமும் தண்ணீர் தேங்குவதை பார்க்கமுடியும். ஆனால் நீதிமன்ற ஊழியர்கள் ஒரு நாள் கூட வேலை செய்வதை நிறுத்துவதில்லை" என அவர் கூறியுள்ளார்.
எனினும் அதன் பின்னர் அவர் வழக்கறிஞரிடம், அவரது குடியிருப்பு பகுதியின் விவரங்களைக் கேட்டறிந்தார் மற்றும் மாநில அரசு வழக்கறிஞர் (SGP) P முத்துக்குமாரிடம் குடிமைப் பணியாளர்களின் கவலையை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன.