NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் முதன்மையான பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் முதன்மையான பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல்
    இந்தியாவின் முதன்மையான பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல்

    இந்தியாவின் முதன்மையான பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 31, 2023
    10:29 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முதன்மையான பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    முகேஷ் அம்பானி ரூ.400 கோடி கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவரைக் கொலை செய்து விடுவோம் என்றும் நேற்று (அக்டோபர் 30) பெறப்பட்ட அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இது கடந்த ஒரு வார காலத்திற்குள் முகேஷ் அம்பானிக்கு விடுக்கப்பட்டு வந்திருக்கும் மூன்றாவது கொலை மிரட்டல் மின்னஞ்சலாகும்.

    முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு ரூ.20 கோடி மற்றும் ரூ.200 கோடி கேட்டும் கொலை மிரட்டல் மின்னஞ்சல்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    முகேஷ் அம்பானி

    பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு: 

    முதலில் ரூ.20 கோடி கேட்டே கொலை மிரட்டல் மின்னஞ்சல் பெறப்பட்டிருக்கிறது. அதற்கு முகேஷ் அம்பானி தரப்பிலிருந்து எந்த பதிலும் அளிக்கப்படாததையடுத்து ரூ.200 மற்றும் ரூ.400 கோடி கேட்டு மேலும் இரண்டு கொலை மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியிருக்கின்றனர்.

    இந்த கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு பாதகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

    மிரட்டல் விடுப்பதற்காக பெறப்பட்ட மின்னஞ்சலில், "போலீசாரால் என்னை ட்ராக் செய்து கைது செய்ய முடியாது. எவ்வளவு பலமான பாதுகாப்பு இருந்தாலும், எங்கள் ஸ்னைப்பர்களால் உங்களை கொலை செய்ய முடியும்" எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இந்த சம்பவங்களையடுத்து, முகேஷ் அம்பானியின் பாதுகாப்பாளர் அளித்த புகாரின் பேரில், ஐபிசி பிரவு 387 மற்றும் 506(2)-ன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முகேஷ் அம்பானி
    ரிலையன்ஸ்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி

    முகேஷ் அம்பானி

    சம்பளமின்றி வேலை பார்க்கும் முகேஷ் அம்பானியின் வாரிசுகள் ரிலையன்ஸ்
    கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி அதானி
    ஆனந்த் அம்பானிக்கு எதிராக வாக்களிக்க பரிந்துரை செய்த ஆலோசனை நிறுவனம் ரிலையன்ஸ்
    '20 கோடி பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவோம்': முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் ரிலையன்ஸ்

    ரிலையன்ஸ்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! குளிர்கால பராமரிப்பு
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்! வணிகம்
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025