பங்குச்சந்தை வராலற்றில் புதிய சாதனையைப் படைத்த MRF நிறுவனப் பங்கு!
இந்தியாவின் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளில் மிக அதிக விலையைக் கொண்ட பங்காக இருந்து வருகிறது எம்ஆர்எஃப் (MRF) நிறுவனப் பங்கு. இன்று அந்நிறுவனப் பங்கானது புதிய மைல்கல்லை எட்டி சரித்திரம் படைத்திருக்கின்றன. இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே முதல் முறையாக எம்ஆர்எஃபி நிறுவனத்தின், ஒரு பங்கின் விலை ரூ.1 லட்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கிய பின்னர் அந்நிறுவனப் பங்குகள் சுமார் 1.37% ஏற்றம் கண்டு ரூ.1 லட்சம் விலையை எட்டியது. சில நிமிடங்களிலேயே மீண்டும் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைவான விலைக்கு வந்தது. இந்த விலை உயர்வின் மூலம், புதிய 52 வார உயர்வையும் எட்டியிருக்கின்றன அந்நிறுவனப் பங்குகள்.
எம்ஆர்எஃப் நிறுவனப் பங்கு:
1993, ஏப்ரல் 27-ம் தேதி மும்பை பங்குச்சந்தையில் ரூ.11-க்கு பட்டியலிடப்பட்டன எம்ஆர்எஃப் நிறுவனப் பங்குகள். ரூ.10 முகமதிப்பில் அந்நிறுவனப் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஆனால், இன்று வரை அந்நிறுவனானது தங்கள் பங்கின் முகமுகதிப்பை குறைக்கவில்லை. எனவே, அந்நிறுவனப் பங்கின் விலையும் குறையாமல் உயர்வையே சந்தித்து வந்தது. 11 ரூபாயில் தொடங்கி இன்று 1 லட்சம் ரூபாய் விலையை அடைந்திருக்கின்றன எம்ஆர்எஃப் நிறுவனப் பங்குகள். இந்தப் பங்கின் விலையானது கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 45% உயர்வையும், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை 14% உயர்வையும், கடந்த மூன்று ஆண்டுகளில் 85% உயர்வையும் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.