சென்னை விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(ஏப்ரல்.,8) ஹைதராபாத்தில் பல திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
பின்னர் அங்கிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் இன்று மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
அங்கு அவர் ரூ.2,467 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புது விமான முனையத்தை துவக்கிவைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
பின்னர் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். எலிபேட் தளத்துக்கு சென்று, அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்கிறார்.
அங்கு அவர் வந்தே பாரத் ரயில் சேவையினை கொடியசைத்து துவக்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வரும் மோடியை ஆரவாரமாக வரவேற்க பா.ஜ.க.,வினர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார் மோடி
#JUSTIN சென்னை விமான நிலையத்தில் ரூ.2,400 கோடி மதிப்பிலான புதிய முனையம் இன்று திறப்பு
— ChannelVision (@iChannelVision) April 8, 2023
பிரதமர் மோடி இன்று பிற்பகலில் திறந்து வைக்கிறார்#PmModi | #ChennaiAirport | #ChannelVision pic.twitter.com/6A5es8PxfK