Page Loader
நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி - துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி - துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

நிலஅளவை செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி - துவக்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

எழுதியவர் Nivetha P
Nov 20, 2023
07:46 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(நவ.,20) தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட காரணத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடங்களுக்கு, நிலவரித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு 3543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் விநியோகம் செய்யும் பணியினை துவக்கி வைத்துள்ளார். இந்த தீர்வானது அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கைக்கு பிறகு கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் ரூ.14 கோடியே 86 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொன்னேரி, திருவட்டார், கிள்ளியூர் வட்டாட்சி அலுவலக கட்டடங்கள், தேனி கூட்டரங்கு கட்டிடம் உள்ளிட்டவைகளை திறந்து வைத்தார்.

முதல்வர் 

இணையவழியிலேயே கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது 

மேலும் அவர் இணையவழி மூலம் நில அளவைக்கு(F-Line Measurement) விண்ணப்பிக்கும் புதிய வசதியையும் அறிமுகம் செய்து துவக்கி வைத்துள்ளார். இந்த புதிய வசதி அறிமுகம் செய்துள்ள நிலையில் இனி பொதுமக்கள் தங்கள் நிலத்தினை அளப்பதற்காக விண்ணப்பிக்க வட்டாட்சியர் அலுவலகம் செல்லவேண்டிய அவசியமில்லை. அதற்கு மாற்றாக https://tamilnilam.tn.gov.in/citizen என்னும் இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கான கட்டணத்தையும் இணையவழியிலேயே செய்ய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதாம். மேலும் நிலஅளவை செய்யப்படும் தேதி மற்றும் நேரம் குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். நில அளவை செய்து முடித்த பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கையினை மனுதாரர் https://eservices.tn.gov.in என்னும் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.