
BS VI புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி
செய்தி முன்னோட்டம்
சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது போல, இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய BS VI வகை பேருந்துகள் வந்துள்ளன.
சென்னையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 90.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,BS VI 150 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 150 BS-VI புதிய பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டது.
இந்த புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் சிறப்பு அம்சங்கள் உள்ளது என செய்தியறிக்கை தெரிவிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | ரூ.90.52 கோடி மதிப்பிலான இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 150 அதிநவீன சொகுசுப் பேருந்துகள் - கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!#UdhayanidhiStalin | #TNSTC | #BUS | #KalaignarSeithigal pic.twitter.com/8xyX1qCPCr
— Kalaignar Seithigal (@Kalaignarnews) August 28, 2024
அம்சங்கள்
BS-VI புதிய பேருந்தில் பயணிகளுக்கான சிறப்பம்சங்கள்
மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு படுக்கைகளுக்கு இடையே அதிகரித்த இடம் மற்றும் தடுப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி (SOS) அமைக்கப்பட்டுள்ளது.
நடத்துனரால் பயணிகளுக்கு தகவல் அறிவிக்க வசதியாக ஒலி பெருக்கி (Micro Phone) அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் கிளாக் பேருந்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது.
அரசாங்க விதிமுறைகளின் படி காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் BS-VI புதிய பேருந்துகளின் engine வடிவமைக்கப்பட்டுள்ளது.