தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி; தேடும் பணியில் அமலாக்கத்துறை
சட்டத்திற்கு புறம்பாக பணப்பரிமாற்றம் செய்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சென்ற மாதம், சென்னையில் கைது செய்தது அமலாக்கத்துறை. அதே நேரம், விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகும்படி, செந்தில் பாலாஜியின் சகோதரர் அஷோக்குமாருக்கும் சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் அவர், தனக்கும் இருதய நோய் பாதிப்பு இருப்பதாக கூறி, காலஅவகாசம் பெற்றார். அதன்பிறகு தொடர்ச்சியாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டும், பதில் வரவில்லை எனக்கூறப்படுகிறது. அதோடு அவர் தலைமறைவாகி விட்டார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அஷோக்குமாருக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடையவிருக்கும் வேளையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேரில் ஆஜராக தவறும்பட்சத்தில், அவரையும் கைது செய்யக்கூடும் எனவும் கூறப்படுகிறது.