சென்னையில் மின்வெட்டு ஏற்பட்டதன் காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், தமிழ்நாடு முழுவதும் மின்தேவையானது கடந்த 2 ஆண்டுகளை விட அதிகமாகியுள்ளது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக ஒரு சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் தேவைக்கு ஏற்ப புதிய மின்மாற்றிகள் 13 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2 நாட்களில் 4,016 மெகாவாட்டாக மின் நுகர்வு அதிகரித்துள்ளது.
45 நாட்களில் 19,387 மெகாவாட்'ஆக அதிகரித்துள்ளது.
மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது.
ஒரு சில சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்தமாக இப்படித்தான் இருக்கு என்னும் பிம்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
சென்னையில் நேற்று 6 இடங்களில் மின் தடை ஏன்? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்#SunNews | #TNEB | @V_Senthilbalaji pic.twitter.com/tke16T83oD
— Sun News (@sunnewstamil) May 17, 2023