Page Loader
திரையரங்கில் அமைச்சர் மகன் ரமேஷ் தாக்கப்பட்ட விவகாரம் - போலீசார் விசாரணை
திரையரங்கில் அமைச்சர் மகன் ரமேஷ் தாக்கப்பட்ட விவகாரம் - போலீசார் விசாரணை

திரையரங்கில் அமைச்சர் மகன் ரமேஷ் தாக்கப்பட்ட விவகாரம் - போலீசார் விசாரணை

எழுதியவர் Nivetha P
Nov 11, 2023
04:20 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு அரசியலிலும், திமுக கட்சியில் துரைமுருகனுக்கு அடுத்த இடத்திலுள்ள மூத்த அரசியல்வாதியாகவும் பார்க்கப்படுபவர் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஓர் மகள் உள்ளனர். இவர்களுள் இளைய மகன் ரமேஷ் நேற்று(நவ.,10) தனது தன்னுடைய மகனை அழைத்து கொண்டு சென்னை தி.நகரில் அமைந்துள்ள ஏஜிஎஸ் திரையரங்கிற்கு 'ஜிகர்தண்டா XX' படம் பார்க்க சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இவர்கள் திரையில் படம் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர்களது பின்வரிசையில் அமர்ந்திருந்தோர் படத்தை பார்க்கவிடாமல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட இந்த கும்பல் திரையரங்கில் கூச்சலிட்டு, விசில் அடித்து செய்த அட்டகாசம் காரணமாக அனைவரும் படம் பார்க்க முடியாமல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார்கள்.

விசாரணை 

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை 

இதனால் அமைச்சரின் மகன் ரமேஷ் அந்த கும்பலை தட்டி கேட்டுள்ளார். இதனால் இருதரப்புகள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் அது கைகலப்பாக மாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சண்டையில் அந்த கும்பல் அமைச்சர் மகனான ரமேஷ் மற்றும் அமைச்சரின் பேரன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இருவரும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, தாக்குதல் நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பியோடிய கும்பலை தேடி வருகிறார்கள்.